அன்புள்ளங்களுக்கு வணக்கம், என்னடா இவன் ஏதோ புது முயற்சினு சொல்லிட்டு ஏதுமே செய்யாம இருக்கிறானே! என்று நீங்கள் நினைப்பது புரிகிறது(திட்டாதீங்க). நானும் உங்களில் யாரையும் விடுவதாய் இல்லை.
ஒரு தொடர்கதை எழுதலாம்னு இருக்கேன், எங்க எதில ஆரம்பிப்பது என்கிறதெல்லாம் யோசிச்சுட்டேன். ஆனா எப்ப முடியும்னு மட்டும் கேட்டுறாதீங்க(ஏன்னா எனக்கே தெரியாது). கொஞ்சம் நீளம் தான் பொறுமையா வாசிக்கும் படி கேட்டு கொள்கிறேன்.
வேறென்னங்க, வாசித்து உங்க கருத்துக்களையும் சொல்ல மறக்காதீங்க. ஆங்.... ஏன் லேட்டுனு சொல்ல மறந்தே போனேன், எனக்கு(ம்) பிடித்த வலை பதிவர்கள்(லோஷன், வால் பையன், லதானந்த், சின்னப் பையன்,கபீரன்பன், ச்சின்னப் பையன், தூயா ....மற்றும் பலரின் பதிவுகளை வாசித்து இன்புற்று இருக்கும் வேளை நேரம் போனதே தெரியல, பாத்தா தேதி பத்தொன்பது) அடடேனு ஸ்டார்ட் பண்ணிறலாம்னு.....
Monday, 19 January 2009
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்தி தொங்க வேண்டாமா..
உம்.. கிளப்புங்கள்..
வாழ்த்துகள் தேனீ,
புது முயற்சி வெற்றிபெறட்டும்.
(என்னையும் ’பிடித்த’ பதிவர் லிஸ்டில் போட்டுட்டீங்களே!:)) பதிவுலகம் ஒரு பெரிய ’மால்’ மாதிரி. வர்றவங்களும் போறவங்களும் புரியாது. அறிமுகத்திற்கு நன்றி
தொடர் கதை முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்!
விரைவில் .....உங்கள் வலைதளத்தில், தொடர் கதையினை எதிர்பார்க்கிறேன்.
சென்னையிலிருந்து ஸ்டாம்போர்டுக்கு வந்த வேளையில் ஸ்டாம்ஃபோர்டில் பிறந்து சிறிய உருவில் இருந்துகொண்டே பெரு வாழ்வு வாழ்ந்த ஸ்ட்ராடன் அவர்கள் வாழ்க்கைக்குறிப்பினைப் படிக்க வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி.
தேனி ஆகிய நீங்கள் தனது தொடர் கதைக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று
யோசிப்பதாகச் சொல்கிறீர்கள்."தேன். நீ " என்று துவங்குங்களேன்.
சுப்பு ரத்தினம்.
ஸ்டாம்ஃபோர்டு, கனெக்டிகட்.
அருமையான தலைப்பு அள்ளித்தந்த ஸ்டாம்ஃபோர்டு சுப்புரத்தினத்திற்கு நன்றி. அலுவல் நிறைந்து விட்டது. வெகு விரைவில் தேன் பாத்திரம் நிரம்பி வழியும்.
தொடர்கதையை எதிர்பார்த்திருக்கிறோம்.
Post a Comment